செய்திகள்

ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் மருத்துவமனையில் அனுமதி

Makkal Kural Official

சென்னை, நவ. 26–

நெஞ்சுவலி காரணமாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தற்போது அவர் நலமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருப்பவர் சக்திகாந்த தாஸ்; 67 வயதாகும் இவர், ஒடிசாவைச் சேர்ந்தவர். ஆனால், தமிழக கேடர் ஐ.ஏ.எஸ்.அதிகாரி. தமிழக அரசில் பல துறைகளில் பணியாற்றி உள்ளார். அடுத்த மாதம் சக்திகாந்த தாசின் பதவிக்காலம் முடிவடைகிறது. அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில் சக்திகாந்த தாசுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவர் டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளார். அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் வெளியான அறிக்கையில், சக்திகாந்த தாஸ் நலமுடன் இருப்பதாகவும், அவரது உடல்நிலை குறித்து கவலைப்பட தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *