செய்திகள்

ரிசர்வ் வங்கி அறிவித்த சலுகைகளுக்கு வங்கி தலைவர்கள், நிதி நிறுவனங்கள் வரவேற்பு

சென்னை, ஆக.8–

ரிசர்வ் வங்கி தங்க அடமான கடனுக்கு நகை மதிப்பில் 90% வரை கடன் தொகை வழங்குதல் போன்ற சலுகைகளை அறிவித்துள்ளது. இதை ஸ்டேட் வங்கி தலைவர் ரஜ்னீஷ்குமார் வரவேற்றுள்ளார். வழங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாதவர்களுக்கு கடன் தவணை திட்டத்தை மாற்றி அமைக்க ரிசர்வ் வங்கி அனுமதித்தது. சிறு, குறுந்தொழில் நிறுவனங்களுக்கு ஊக்கமாக இருக்கும் என்றார். வருங்கால வளர்ச்சி நடவடிக்கையாக இது விளங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

லட்சுமி விலாஸ் வங்கி கருவூலத்துறை பிரிவு தலைவர் ஆர்.கே.குருமூர்த்தி பேசுகையில், வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை. மேலும் சில மாதங்கள் கழித்து ரிசர்வ் வங்கி காத்திருந்து முக்கிய துறைகளுக்கு ஊக்கம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் பைனான்ஸ் நிர்வாக இயக்குனர் உமேஷ் ரெவங்கர் பேசுகையில், ஊரடங்கு காலத்திலும் வளர்ச்சிக்காக தொடர்ந்து விலைவாசியை கண்காணித்து வருகிறது. கடன்தாரர்கள் கடனை சீரமைக்க அனுமதி வழங்கி உள்ளது. போதிய பண புழக்கம் இருக்கவும், நடவடிக்கை எடுத்துள்ளது வரவேற்கத்தக்கது ஆகும் என்றார்.

சதீஷ் மகர்

கிரெடாய் அமைப்பின் தலைவர் சதீஷ் மகர் பேசுகையில், ரூ. 10 ஆயிரம் கோடியை நபார்ட் மற்றும் தேசிய வீட்டு வசதி வங்கி மூலம் பணப்புழக்கத்துக்கு ஏற்பாடு செய்ததை பாராட்டினார். சிறு, குறுந்தொழில் கடனுக்கு தவணையை நீட்டிக்க வங்கிகளை அனுமதித்ததை பாராட்டினார்.

வங்கியாளர் கே.வி.காமத் தலைமையில் செயல்படும் உயர்நிலை ஆலோசனை குழு பரிந்துயைில் கடன் தவணை சீரமைப்பு, கிரெடாய் கோரிக்கையாளர் கடன் சீரமைப்பை ஏற்றுள்ளதை அவர் வரவேற்றார்.

10 ஆயிரம் கோடி கடன்

ஐஐஎப்எல் பைனான்ஸ் நிறுவன தங்க நகை கடன் பிரிவு தலைவர் கவுரவ் குமார் பேசுகையில், ரிசர்வ் வங்கி தங்க நகை கடன் அளவை உயர்த்தி வழங்குவதில், மக்களுக்கு பணப்புழக்கத்துக்கு உதவும் என்றார். ஐசிஐசிஐ செக்யுரிடிஸ் பொருளாதார நிபுணர் அனகா தியோடர் பேசுகையில், ஏற்கனவே வட்டி குறைப்பு அறிவிக்கப்பட்ட நிலையில், கடன் தவணை நீட்டிப்பு வளர்ச்சிக்கு உதவும் என்றார்.

நபார்டு மற்றும் தேசிய வீட்டு வசதி வங்கி மூலம் கூடுதலாக ரூ. 10 ஆயிரம் கோடி கடன் வாங்க உதவுகிறது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *