செய்திகள்

ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது

சென்னை, மே 25–

சென்னையில் ராயபுரம் மண்டலத்தில் தான் அதிக அளவில் கொரோனா தொற்று உள்ளது.

இந்த மண்டலத்தில் நேற்று கொரோனா பாதிப்பு 1981 ஆக இருந்தது. இந்த நிலையில் இன்று மேலும் 90 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இதனை அடுத்து ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2071 ஆக உள்ளது. சென்னையில் ஆரம்பத்தில் இருந்தே ராயபுரம் மண்டலத்தில் தான் அதிக அளவு தொற்று இருந்து வருகிறது. நாளுக்கு நாள் இது அதிகரித்து இன்று இந்த அளவை எட்டியுள்ளது.

எனவே ராயபுரம் மண்டலத்தில் அதிகாரிகள் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். மக்களுக்கு இலவச முக கவசம், வைட்டமின் மாத்திரைகள், கபசுர குடிநீர் ஆகியவைகளை வழங்கி வருகிறார்கள். மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *