செய்திகள்

ராம்ராஜ் காட்டன் ஊழியர்களுக்கு பரிசு: நிறுவனர் ஆர்.நாகராஜன் வழங்கினார்

ஈரோடு, ஜூன் 10

ஈரோடு ராம்ராஜ் காட்டன் நிறுவன அலுவலகத்தில் நடைபெற்ற பரிசளிப்பு தினவிழாவில் நிறுவனர் கே.ஆர்.நாகராஜன் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.

ஆடையுலகின் வெற்றியின் அடையாளமாக கருதப்படும் ராம்ராஜ் காட்டன் ஈரோடு அலுவலகத்தில் பரிசளிப்பு தினவிழா சிறப்பாக கொண்டாப்பட்டது.

இந்த விழாவையொட்டி, அலுவல கத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் ஓவியம், பேச்சு, பாட்டு, நடனம் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளின் வெற்றி வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

இவ்விழாவிற்கு ராம்ராஜ் காட்டன் நிறுவனர் கே.ஆர்.நாகராஜன் தலைமை தாங்கினார். உடன் அருண்ஈஸ்வர், தண்டபாணி, கணேஷ், நந்தகுமார், அருண், கணபதி, செல்வக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *