செய்திகள்

ராம்கோ சிமெண்ட்ஸ் ஊழியர் நலம், பாதுகாப்பு சுற்றுச்சூழல் திட்டங்களுக்கு தங்க மயில் விருது

ராம்கோ சிமெண்ட்ஸ் ஊழியர் நலம், பாதுகாப்பு சுற்றுச்சூழல் திட்டங்களுக்கு தங்க மயில் விருது

நீதிபதி வெங்கடாச்சலய்யா பாராட்டு

சென்னை, ஆக.4–

ராம்கோ குரூப் அங்கமான ராம்கோ சிமெண்ட்ஸ் ஆலத்தியூர் தொழிற்சாலையின் சிறப்பான செயல்பாடு, ஊழியர் நலம், ஊழியர் பாதுகாப்பு, தொடர் பயிற்சி மற்றும் சுற்றுச்சூழல் பேணுதலுக்காக மத்திய அரசின் தங்க மயில் விருதை இந்த நிறுவனத்துக்கு இந்திய முன்னாள் நீதிபதி எம்.என். வெங்கடாச்சலய்யா வழங்கினார்.

இவர் தேசிய மனித உரிமை கமிஷன், தேசிய இந்திய சீரமைப்பு கமிஷன் தலைவராக பதவி வகிக்கிறார். தங்க மயில் தேசிய பயிற்சி விருது –2020 வழங்கும் அமைப்பு, கார்ப்பரேட் நிறுவனங்கள், பெரிய நிறுவனங்கள், சிறு தொழில் நிறுவனங்களின் பொது, தனியார், அரசு நிறுவனங்களிடமிருந்து 344 விண்ணப்பங்கள் பெற்றது. இதில் 151 நிறுவனங்கள் தேர்வுக்கு போட்டியிட்டன.

ராம்கோ சிமெண்ட்ஸ் செயல்பாடு நவீன தொழில் நுட்பம், பணிக்கு பயிற்சி, ஊழியர் மன நல பயிற்சி போன்றவை நல்ல பலனை அளித்தால், தேர்வுக்குழுவினர் இந்நிறுவனத்தை தேர்வு செய்தனர்.

இந்நிறுவனம் தற்போது தர சர்க்கிளில் பங்கேற்று மேம்படுத்த ஆலோசனை வழங்குதல், சிமெண்ட்ஸ் தொழில் நுட்பத்தில் புதிய திறமைக்கு ஆலோசனை வழங்க ஊழியர் பங்கேற்க வைக்கப்பட்டனர்.

இறுதியாக 14 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டது. இதில் சிமெண்ட் துறையில் ராம்கோ சிமெண்ட்ஸ் முதல் இடம் பெற்று தங்க மயில் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது.

தனது ஊழியர்கள் மிகப் பெரிய பலமாக கருதுவதாலும் அவர்கள் பயிற்சி, பாதுகாப்புக்கு இந்த நிறுவனம் முதலீடு செய்வதாலும், தொலைநோக்கு வளர்ச்சிக்கு காரணமாக இருப்பதாலும் தங்க மயில் விருது பெற்றது. இந்த விருது காணொலி மூலம் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *