செய்திகள்

ராமேசுவரம் மீனவர்கள் 4 பேரை கைது செய்த இலங்கை கடற்படை

மண்டபம், மார்ச் 29–

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மண்டபத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்றவர்களில், இரண்டு விசைப்படகுகள் மற்றும் 16 மீனவர்களை இலங்கை கடற்படையினர் அண்மையில் சிறைபிடித்துச் சென்றனர்.

இதனைக் கண்டித்து ராமேசுவரம், மண்டபம் மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்ற இந்த வேலைநிறுத்தப் போராட்டம் திங்கள்கிழமை வாபஸ் பெறப்பட்டது. இதையடுத்து, மீன்வளத் துறை அனுமதி பெற்று 550-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

4 பேர் கைது

இந்நிலையில், அவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த நிலையில், அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் விரட்டியடித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ஒரு விசைப்படகு மற்றும் அதில் இருந்து 4 மீனவர்களை சிறை பிடித்து சென்றனர்.

தற்போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை 4 பேரும் எல்லை தாண்டி வந்ததாக கூறி தலைமன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர். இலங்கை கடற்படையினரின் அத்துமீறல் தொடர்வதால் தமிழ்நாடு மீனவர்கள் அச்சத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.