செய்திகள்

ராமநாதபுரத்தில் லலிதா ஜூவல்லரி புதிய கிளை எம்.எல்.ஏ. காதர்பாட்சா முத்துராமலிங்கம் திறந்தார்

Makkal Kural Official

ராமநாதபுரம், ஏப்.16-

ராமநாதபுரத்தில் லலிதா ஜூவல்லரியின் புதிய கிளையை காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

ராமநாதபுரம் ரெயில்வே பீடர் ரோட்டில் லலிதா ஜூவல்லரி நிறுவனத்தின் புதிய கிளை அமைக்கப்பட்டுள்ளது. நவீன வசதிகளுடன், பல்வேறு சிறப்பு அம்சங்களுடனும் நிறுவப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நிறுவன தலைவரும் நிர்வாக இயக்குனருமான கிரண்குமார் தலைமையில் நடைபெற்றது.

ராமநாதபுரம் செய்யது அம்மாள் என்ஜினீயரிங் கல்லூரி தாளாளர் சின்னத்துரை அப்துல்லா, நகர்மன்ற தலைவர் கார்மேகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த விழாவில் ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. பங்கேற்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர்.

இதுகுறித்து நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான கிரண்குமார் பேசுகையில், ‘41 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கம், வைரம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் விற்பனையில் தென் இந்தியாவில் முன்னணி நிறுவனமாக உள்ளது. இந்த நிறுவனத்தின் புதிய கிளையானது, ராமநாதபுரத்தில் ரெயில்வே பீடர் ரோட்டில் பிரமாண்டமாக தொடங்கப்பட்டுள்ளது.

இங்கு சர்வதேச தரத்திலான நவீன டிசைன்களில் தங்க, வைர நகைகள் விற்பனைக்கு உள்ளன. தங்கள் நகைகளுக்கு சேதாரத்தில் சிறப்பு சலுகைகள் உள்ளன. வைரம் காரட்டுக்கு அதிரடியாக விலை குறைப்பு உள்ளது. மார்க்கெட்டிலேயே நகைகளுக்கு குறைந்த விலை என்ற உறுதிமொழியை தருகிறோம்’ என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *