செய்திகள்

ராமச்சந்திரா மருத்துவமனை நடத்திய பல்துறை மருத்துவ முகாம்

சென்னை, நவ. 18–
திருவான்மியூரில் ராமச்சந்திரா மருத்துவமனை சார்பில், பல்துறை மருத்துவ முகாம் நடைபெற்றது.
திருவான்மியூரிலுள்ள சென்னை வாழ் ரெட்டியாப்பட்டி நாடார் சங்கத்துக்கு சொந்தமான திருமண அரங்கில், ராமச்சாந்திரா மருத்துவ கல்லூரி மருத்துவ மனையின் சார்பில், பல்துறை மருத்துவ முகாம் இன்று காலை 9 மணி அளவில் தொடங்கியது.
இந்த மருத்துவ முகாமை, சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி மருத்துவமனை தலைவர் எஸ்.அனந்தன், மக்கள் குரல் ஆசிரியர் ஆர்.முத்துக்குமார், வடசென்னை மாவட்ட அண்ணா திமுக மருத்துவ அணி செயலாளர் டாக்டர் புகழேந்தி ஆகியோர் துவக்கி வைத்தனர்.
முகாமில், இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு பரிசோதனைகள் போன்ற அடிப்படை பரிசோதனைகள் தொடங்கி, கண் நோய்கள், பல் பாதிப்பு, தோல் நோய்கள், நுரையீரல் பாதிப்பு, குழந்தை நோய் பரிசோதனை, எலும்பு, பெண்களுக்கான பாதிப்பு, பொது மருத்துவ பரிசோதனை என பல்வேறு துறை வல்லுநர்களும் கலந்து கொண்டு பரிசோதனைகள் செய்து, ஆலோசனைகள் வழங்கினர்.
மதியம் 1 மணி வரையில் நடைபெற்ற மருத்துவ முகாமில் கலந்துகொண்ட ஏராளமான பொதுமக்கள், தங்களின் பாதிப்புகளுக்கு பரிசோதனைகள் செய்துகொண்டதுடன், தங்களின் பழைய மருத்துவ பரிசோதனை ஆவணங்களை காட்டி, ஆலோசனைகள் பெற்று பயன்பெற்றனர். மருத்துவ முகாமுக்கான ஏற்பாடுகளை நெல்லை பார்மசி டி. சிவராஜ் செய்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *