செய்திகள்

ராணுவத் தளவாடங்கள் உற்பத்தியில் தன்னிறைவு அடைய மத்திய அரசின் நடவடிக்கை என்ன?

மக்களவையில் ஜெகத்ரட்சகன் கேள்வி

புதுடெல்லி, மார்ச் 27–

ராணுவத் தளவாடங்கள் உற்பத்தியில் தன்னிறைவு அடைய மத்திய அரசின் முன்முயற்சிகள் என்ன? என்றும், அதன் விவரங்களை பகிர்ந்து கொள்ள இயலுமா? என்றும் மத்திய அரசின் பாதுகாப்புத்துறை இணையமைச்சர் அஜய்பட்டிடம் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெகத்ரட்சகன் மக்களவையில் கேள்வி எழுப்பினார்.

இதற்கு இணையமைச்சர் பதிலளிக்கையில், ‘ராணுவத் தளவாடங்கள் உற்பத்தயை பெருக்கவும், இறக்குமதியை குறைக்கவும், ஆத்மநிர்பர் பாரத், மேக் இன் இந்தியா திட்டங்கள் மூலம், மத்திய அரசு தேவையான முன்முயற்சிகளை எடுத்து வருகிறது என்றும், இந்திய உற்பத்தியை வாங்குவதற்க முன்னுரிமை அளிக்கப்படுவதோடு, மிகவும் அத்தியாவசிய தேவைகளை மட்டுமே இறக்குமதி செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது என்றும் தெரிவித்தார்.

மேலும் வெளிநாட்டு உற்பத்தியாளர்களை இந்தியாவில் தயாரிக்கும் திட்டங்களை மத்திய அரசு ஊக்குவித்து வருவதாகவும், பல்வேறு ராணுவத் தளவாடங்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதகாவும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்துறையில் உற்பத்தியை பெருக்க தேவையான சலுகைகளை அளித்து வருவதாகவும், தமிழ்நாட்டிலும், உத்திரப்பிரரேதசத்திலும் பாதுகாப்புத் தளவாட உற்பத்தி வளாகங்கள் அமைக்கத் திட்டம் உள்ளது’ என்றும் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *