செய்திகள்

ராஜீவ் காந்தி பிறந்தநாள்: வெங்கய்யா நாயுடு, மோடி அஞ்சலி

புதுடெல்லி, ஆக்.20–

இன்று ராஜீவ் காந்தியின் பிறந்த பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு அஞ்சலி என்று பதிவிட்டுள்ளார்.

வெங்கய்யா நாயுடு

இதே போல ராஜீவ் காந்தியின் பிறந்த நாளை ஒட்டி துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு அஞ்சலி செலுத்தினார். இதுதொடர்பாக தன் டுவிட்டர் பக்கத்தில், ‘தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சிக்கு ராஜீவ் காந்தியின் பங்களிப்பு எப்போதும் நினைவில் இருக்கும்’ என பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவரும், முன்னாள் பிரதமருமான மறைந்த ராஜீவ் காந்தியின் 77-ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. காங்கிரஸ் கட்சியினர் இந்த நாளினை ‘சத்பவன திவாஸ்’ என்ற பெயரில் கொண்டாடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *