செய்திகள்

ராஜீவ்காந்தி கொலை வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரி கொரோனாவுக்கு பலி

சென்னை, மே.12–

ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த சி.பி.ஐ முன்னாள் தலைமை அதிகாரி ரகோத்தமன் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்தவர் முன்னாள் சிபிஐ தலைமை அதிகாரி ரகோத்தமன் (வயது 72). ஓய்வு பெற்ற இவர், சென்னையில் வசித்து வந்தார். இந்நிலையில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், சென்னை முகப்பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தபோதும் அவை பலன் அளிக்காமல், சிபிஐ முன்னாள் அதிகாரி ரகோத்தமன் கொரோனாவால் இன்று காலமானார்.

சிபிஐ வழக்கு தொடர்பான பல்வேறு தொலைக்காட்சி விவாதங்களிலும் ராஜிவ் காந்தி தொடர்பான விவாதங்களிலும் பங்கேற்று, நடுநிலையான பல்வேறு கருத்துக்களைத் திறம்பட தெரிவித்து வந்தவர் ரகோத்தமன்.

இவரது மறைவுக்கு அரசு உயரதிகாரிகள், அரசியல் தலைவர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ராஜீவ் கொலை வழக்கு குறித்து ‘மர்மம் விலகும் நேரம்’ என்ற புத்தகத்தையும் ராகோத்தமன் எழுதியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *