ஜோத்பூர், மார்ச் 18–
ராஜஸ்தான் அருகே எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டு விபத்துக்கு உள்ளானது.
ராஜஸ்தானின் ஆஜ்மீர் அருகே சபர்மதி – ஆக்ரா விரைவு ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ரெயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டது. நள்ளிரவு 1 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக விபத்தில் யாருக்கும் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை
விபத்து தொடர்பாக ரெயில் பயணிகள் விவரம் அறிந்து கொள்ள உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. 0145 2429642 என்ற எண்ணை ரெயில்வே அறிவித்துள்ளது. விபத்துக்குள்ளான ரெயில் பெட்டிகள் மீட்கப்பட்டு தண்டவாளத்தை சீர் செய்யும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதால் அவ்வழியாக சென்ற ரெயில்கள் தாமதம் ஆகின. ரெயிலின் என்ஜின் மற்றும் 4 பெட்டிகள் தடம் புரண்டதாகவும் உடனடியாக மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் ரெயில்வே அதிகாரிகள் கூறினர்.
இந்த ரெயில் விபத்து காரணமாக அப்பகுதியில் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.