செய்திகள்

ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் தானியங்கி கைகழுவும் இயந்திரம்

ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் தானியங்கி கைகழுவும் இயந்திரம்:

கமிஷனர் விசுவநாதன் துவக்கி வைத்தார்

 

சென்னை, மே 25–

எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் தானியங்கி கை கழுவும் இயந்திரத்தின் பயன்பாட்டை காவல்துறை கமிஷனர் ஏ.கே. விசுவநாதன் துவக்கி வைத்து ஆயுதப்படை காவலர்களுக்கு கபசுர குடிநீர், முகக்கவசம் மற்றும் கிருமி நாசினிகளை வழங்கினார்.

சென்னை பெருநகர காவல் துறை கமிஷனர் ஏ.கே. விசுவநாதன் உத்தரவின்பேரில், சென்னையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் ஆயுதப்படை காவலர்கள் பயன்படுத்துவதற்காக புதிதாக அமைக்கப்பட்டுள்ள தானியங்கி கைகழுவும் இயந்திரத்தின் பயன்பாட்டை கமிஷனர் ஏ.கே. விசுவநாதன் துவக்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து காவலர்களுக்கு கபசுர குடிநீர், முகக்கவசம் மற்றும் திரவ சுத்திகரிப்பான்களை வழங்கினார். மேலும் இந்த தானியங்கி கைகழுவும் இயந்திரந்தை நிறுவ உதவிய தன்னார்வ தொண்டு ஆர்வலர்களுக்கு கமிஷனர் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் கமிஷனர் (தலைமையிடம்) எச்.எம்.ஜெயராம், இணை கமிஷனர் (தலைமையிடம்) ஏ.ஜி.பாபு, நுண்ணறிவுப்பிரிவு துணை கமிஷனர்கள் ஆர்.திருநாவுக்கரசு, எம்.சுதாகர், ஆயுதப்படை துணை கமிஷனர்கள் சௌந்தர்ராஜன், ரவிச்சந்திரன், சோமசுந்தரம் (மோட்டார் வாகனப்பிரிவு) மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *