செய்திகள்

ராஜபாளையத்தில் ராம்கோ பேப்ரிக்ஸ் ரூ. 250 கோடியில் நிறுவிய தொழிற்சாலை; நூல் சாயமிடுதல், பருத்தி துணி உற்பத்தி துவக்கம்

Spread the love

சென்னை, மார்ச் 30

ராஜபாளையத்தில் ராம்கோ பேப்ரிக்ஸ் ரூ.250 கோடியில் நிறுவிய தொழிற்சாலையில் நூல் சாயமிடுதல், பருத்தி துணி உற்பத்தி துவக்கியது என்று இதன் தலைமை எக்சிகியூடிவ் அதிகாரி ஏ.வி.தர்மகிருஷ்ணன் தெரிவித்தார்.

ராம்கோ குரூப் ராஜபாளையத்தில் நிறுவி உள்ள ராஜபாளையம் மில்ஸ் அங்கமான ராம்கோ பேப்ரிக்ஸ், ரூ.250 கோடியில் நிறுவி உள்ள நூல் சாயமிடுதல், நெசவு ஆலை உற்பத்தியை துவக்கியது. ஏற்கனவே தயாரிக்கும் காட்டன் நூலை சாயமிட்டு, துணியாக நெசவு செய்வதால் கூடுதல் வருவாய் கிடைக்கும். உலக தரத்தில் உற்பத்தியாகும். ஆண்டுக்கு 1 கோடி மீட்டர் துணி தயாரிக்கப்படும் என்று தலைமை எக்சிகியூடிவ் அதிகாரி ஏ.வி.தர்மகிருஷ்ணன் தெரிவித்தார்.

ராமகோ சிமெண்ட், டெக்ஸ்டைல், சாப்ட்வேர், அஸ்பெஸ்டாஸ் உற்பத்தியில் இதன் சேர்மன் பி.ஆர்.வெங்கட்ராமராஜா தலைமையில் சிறப்பாக செயல்படுகிறது.

ஏ.வி.தர்மகிருஷ்ணன் பேசுகை யில், ராம்கோ பேப்ரிக்ஸ் இந்த நூல் சாயமிடும் யூனிட்டில், ராம்கோ மெலஞ்ச் புராடக்ட்ஸ் நூலுக்கு சாயமிடும் பணிகளையும் மேற்கொள்ளும் என்றார். இதுவரை ராம்கோ பேப்ரிக்ஸ் நிறுவனத்திடம் நூல் வாங்கியவர்கள், வேறு நிறுவனங்களிடம் நெசவுக்கு கொடுத்து வந்தனர். இனி ராம்கோவிடமே நெசவு செய்த துணிகளை வாங்கலாம். ஏனெனில் உற்பத்தி அனைத்தும் உலக தரம். தயாரிக்கும் நூலுக்கு கூடுதல் மதிப்பு பெற இந்த துணி தயாரிப்பு யூனிட் நிறுவப்பட்டது என்றார் அவர்.

ராம்கோ டெக்ஸ்டைல் பிரிவு அங்கமான ராஜபாளையம் மில்ஸ் மற்றும் 8 உற்பத்தி யூனிட்கள் உள்ளன. இது ஆண்டுக்கு ரூ. 1300 கோடி வர்த்தகம் புரிகிறது. இதில் 30% ஏற்றுமதி செய்யப்படுகிறது. 25% கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது.

சிறந்த ஆராய்ச்சி பிரிவு, புதிய முயற்சிகள், உலக தர உற்பத்தி, பல்வேறு தொழில் துறை சிறப்பாக செயல்படுத்திய அனுபவம், ராம்கோ பேப்ரிக்ஸ் வெற்றிக்கு வழிவகுக்கும் என்றும் ஏ.வி.தர்மகிருஷ்ணன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *