செய்திகள்

ராசிபுரம் அருகே பஸ் நிழற்கூடத்தில் கார் மோதி வனவர் உள்பட 3 பேர் பலி

ராசிபுரம், நவ. 5–

ராசிபுரம் அருகே உள்ள பேளுக்குறிச்சி மோளப்பாளையம் பேருந்து நிறுத்த நிழற்கூடத்தின் மீது போலிரோ கார் மோதியதில், வனவர் உள்ளிட்ட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

கேரளாவை சேர்ந்த மர வியாபாரி மார்த்தாண்டம் ராஜன் (வயது 43), கொல்லிமலை ஆரியூர் பகுதியை சேர்ந்த மரம் வியாபாரி செல்வகுமார் (வயது 42) கொல்லிமலை வனவர் ரகுநாதன் (வயது 40) உட்பட 3 பேர் சனிக்கிழமை இரவு கொல்லிமலையில் இருந்து பொலிரோ காரில் ராசிபுரம் நோக்கி சென்றனர்.

3 பேரும் பலி

அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், பேளுக்குறிச்சி மோளப்பாளையம் பஸ் ஸ்டாப் நிழற்கூடத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த பேளுக்குறிச்சி போலீசார் 3 பேரின் உடலையும் மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த விபத்தால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *