செய்திகள்

ராகுல் காந்தியை ஆதரித்து ரேபரேலியில் சோனியா, அகிலேஷ், பிரியங்கா பிரச்சாரம்

லக்னோ, மே 17–

உத்தரபிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தியை ஆதரித்து சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ் இன்று பிரச்சாரம் செய்ய உள்ளனர்.

இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள 7 கட்டங்களில் 4 கட்ட தேர்தல் நிறைவடைந்துள்ளது. 5 ஆம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகியுள்ளது. மக்களவைத் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். அதேபோல் ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு தொகுதி மற்றும் உத்தரபிரதேசத்தின் ரேபரேலி தொகுதி என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

சோனியா காந்தி,

அகிலேஷ் பிரச்சாரம்

இந்தநிலையில், ரேபரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் காந்தியை ஆதரித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி இன்று பிரச்சாரம் செய்ய உள்ளார். இதில் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *