செய்திகள்

ராகுல் காந்தியை அடைத்து வைத்து கன்னத்தில் அறைய வேண்டும்: பாஜக எம்எல்ஏ அநாகரிக பேச்சு

பெங்களூரு, ஜூலை 10–

ராகுல் காந்தியை நாடாளுமன்றத்தில் அடைத்து வைத்து கன்னத்தில் அறைய வேண்டும் என கர்நாடக பாஜக எம்எல்ஏ அநாகரீகமாக பேசியது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலத்தின் வடக்கு மங்களூர் தொகுதி பாஜக எம்எல்ஏ–வாக இருப்பவர் பரத் செட்டி. இவர் ராகுல் காந்தியை பாராளுமன்றத்திற்குள் பூட்டி வைத்து கன்னத்தில் அறையை வேண்டும் என்று வரம்பு மீறி அநாகரீகமாக பேசி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேவலமான பேச்சு

மேலும் ராகுல் காந்தி மங்களூரு வந்தாலும் அதே கதி தான் என்றும் கூறியுள்ளார். பாராளுமன்றத்தில் இந்து மத கடவுள் சிவனின் படத்தை ராகுல் கையில் ஏந்தி பாஜகவினார் முன்பு காட்டிய குறித்து பேசும்பொழுது பரத் செட்டி இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர், கடவுள் சிவன் தன்னுடைய நெற்றிக்கண்ணை திறந்தால் தான் சாம்பலாகி விடுவோம் என்று பைத்தியக்கார (ராகுல் காந்தி)னுக்கு தெரியாது. ஹிந்துக்களை குறித்து என்ன சொன்னாலும் அவர்கள் கேட்டுக் கொண்டிருப்பார்கள் என்று அவர் நினைக்கிறார். இந்து மதத்தையும், கோவில்களையும் பாதுகாப்பதை பாஜக கடமையாக பார்க்கிறது. ஆனால் காங்கிரஸ் இந்து மதமும், இந்துத்துவாதமும் வேறு வேறு என்று சொல்லி வருகிறது என்று பேசி சர்ச்சை கிளப்பியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *