டெல்லி, டிச. 24–
டெல்லியில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் செப்டம்பர் 7 ந்தேதி தொடங்கிய காங்கிரஸின் ஒற்றுமை நடைப்பயணம் கேரளம், ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களைத் தொடர்ந்து இன்று இன்று காலை அரியானாவின் பரிதாபாத் நகரில் இருந்து தலைநகர் டெல்லிக்குள் நுழைந்தது.
சோனியா, பிரியங்கா
இன்றைய நடைப்பயணம் டெல்லி செங்கோட்டை பகுதியில் முடிவடைகிறது. பின்னர் ஒரு வார காலம் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் டெல்லியில் தொடங்கி இமாச்சல் பிரதேசம் வழியாக ஜம்மு-காஷ்மீரில் முடிவடைகிறது. முன்னதாக, பல முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள் பலரும் ராகுல் காந்தியின் நடைப்பயணத்தில் கலந்துகொண்டு அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று தலைநகர் டெல்லியில் நடைபெறும் ஒற்றுமை நடைப்பயணத்தில் திரளானோர் கலந்து கொண்டுள்ளனர். காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர். பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவும் கலந்து கொண்டுள்ளார்.