கீவ், மே 9–
உக்ரைன் சென்ற கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, உக்ரைன் மற்றும் ரஷ்யப் படைகளுக்கு இடையே நடந்த கடுமையான சண்டையால் அழிக்கப்பட்ட இர்பின் நகரை நேற்று பார்வையிட்டார்.
ரஷ்யா – உக்ரைன் போர் கடந்த 75 நாளாக நடைபெற்று வருகிறது. ரஷ்ய படைகள் உக்ரைன் நாட்டின் பல்வேறு நகரங்களில் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
இந்நிலையில் நேற்று உக்ரைன் சென்ற கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, உக்ரைன் மற்றும் ரஷ்யப் படைகளுக்கு இடையே நடந்த கடுமையான சண்டையால் அழிக்கப்பட்ட இர்பின் நகரை நேற்று பார்வையிட்டார்.
இதன்பின் உக்ரைன் தலைவருடனான செய்தியாளர் சந்திப்பில் ட்ரூடோ கூறியதாவது:-
உக்ரைனில் அழிக்கப்பட்ட இர்வின் நகரை பார்வையிட்டேன். ரஷ்யாவின் சட்டவிரோதப் போரின் கொடூரத்தை நான் நேரடியாகக் கண்டேன். கொடூரமான போர்க்குற்றங்களுக்கு விளாடிமிர் புதின் தான் பொறுப்பு என்பது தெளிவாகிறது.
நமது வெற்றிக்குப் பின், உக்ரேனிய நகரங்களின் சீரமைப்புக்கான உதவியை நாங்கள் வழங்குவோம்.
இவ்வாறு ஜஸ்டின் ட்ரூடோ கூறினார்.