செய்திகள்

ரஷ்ய குண்டுவீச்சில் உக்ரைன் பாலே நடனக் கலைஞர் பலி

கீவ், மார்ச் 19–

ரஷ்ய தாக்குதலில் காயமடைந்த உக்ரைனை சேர்ந்த பாலே நடன கலைஞர் 3 வாரங்களுக்கு பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்து வரும் போரானது தொடர்ந்து 24வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில், பொதுமக்கள் 600 பேர் வரை உயிரிழந்து உள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர் என ஐ.நா. மனித உரிமைகளுக்கான தூதரகம் தெரிவித்து உள்ளது.

இதில், கடந்த சில நாட்களுக்கு முன் உக்ரைனின் தலைநகர் கீவில் உள்ள குடியிருப்பு கட்டிம் ஒன்றின் மீது ரஷ்ய ஏவுகணை ஒன்று நடத்திய தாக்குதலில் உக்ரைன் நாட்டு நடிகை ஓக்சானா ஸ்வெட்ஸ் (வயது 67) காயமடைந்தார். இதன்பின் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதனை தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர் என்ற பத்திரிகை உறுதி செய்துள்ளது. இதேபோன்று, ரஷ்ய தாக்குதலில் உக்ரைனை சேர்ந்த பாலே நடன கலைஞர் ஆர்டியோம் தத்சிஷின் (வயது 43) காயமடைந்து கடந்த 3 வாரங்களாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உடல்நிலை மோசமடைந்தது. அந்நாட்டில், தேசிய அளவில் சிறந்த நடன கலைஞரான அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.