செய்திகள்

ரஷ்யாவில் 3 லட்சம் பேர் பாதிப்பு

மாஸ்கோ, மே 21–

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,764 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்தது.

சீனாவிலிருந்து பரவ துவங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இந்த வைரஸ் அதிக உயிர் பலி வாங்கி வருகிறது.

பாதிப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலக வல்லரசு நாடுகளான அமெரிக்கா கொரோனா பாதிப்பில் முதலிடமும், ரஷ்யா 2வது இடமும் பிடித்துள்ளன. இந்நிலையில், ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 8,764 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்த பாதிப்பு 3 லட்சத்தை கடந்தது. இதுவரை அங்கு 3 லட்சத்து 8 ஆயிரத்து 705 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. புதிதாக 135 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 2,972 ஆக உயர்ந்தது. கொரோனா பாதிப்பிலிருந்து 85,392 பேர் இதுவரை மீண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *