செய்திகள்

ரஷ்யாவில் பயங்கர காட்டுத் தீ: 21 பேர் பலி

மாஸ்கோ, மே 11–

ரஷ்யா மற்றும் சைபீரியாவின் எல்லையில் அமைந்துள்ள யூரல் மலைப்பகுதியில் திடீரென காட்டுத் தீ ஏற்பட்டது. இதனால் ரஷ்யாவின் குர்கான் மற்றும் சைபீரியாவின் டியூமென், ஓம்ஸ்க் ஆகிய மாகாணங்களில் உள்ள பல கிராமங்களுக்கு தீ பரவியது.

இதில் ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள், ஆயிரக்கணக்கான ஹெக்டேர் விவசாய நிலங்கள் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது.

மேலும் இந்த தீ விபத்தில் சிக்கி 21 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த தீயில் வேறு யாரேனும் சிக்கி உள்ளனரா என்பது குறித்த தேடுதல் வேட்டையும் நடந்து வருகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *