செய்திகள் நாடும் நடப்பும்

ரஷ்யாவின் எல்லையில் நேட்டோ துருப்புக்கள் அவசியமா?


ஆர் முத்துக்குமார்


நேட்டோ நாடுகளின் இரண்டு நாள் கூட்டம் லிதுவேனியாவின் வில்னியஸில் துவங்கி விட்டது, இதில் ரஷ்யாவுக்கு எதிராக தங்களை தற்காத்துக் கொள்வதற்கான புதிய விரிவான திட்டம் குறித்து நேட்டோ நாடுகள் ஆலோசிக்கின்றன. அத்துடன் உக்ரேனை உறுப்பினராக சேர்த்துக் கொள்வது குறித்தும் விவாதிக்கப்படுகிறது.

பனிப்போருக்குப் பிறகு ரஷ்யாவை எதிர்கொள்வது குறித்து நேட்டோ நடத்தும் மிக விரிவான ஆலோசனை இதுவாகும்.

நேட்டோ என்பது வடக்கு அட்லாண்டிக் நாடுகள் கூட்டமைப்பு ஆகும்.

1949–-ம் ஆண்டு அமெரிக்கா, பிரிட்டன், கனடா, பிரான்ஸ் உள்ளிட்ட 12 நாடுகள் இணைந்து இந்த கூட்டமைப்பை தொடங்கின. அதில் தற்போது 31 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

இந்த அமைப்பில் உள்ள ஒரு நாடு தாக்கப்பட்டால் மற்ற நாடுகள் உதவிக்கு வர அவை ஒப்புக் கொண்டுள்ளன.

இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு ஐரோப்பாவில் சோவியத் விரிவாக்கத்தை தடுப்பதே இதன் உண்மையான நோக்கமாக இருந்தது.

1991–-ம் ஆண்டு சோவியத் ஒன்றியம் சிதைந்த பிறகு கிழக்கு ஐரோப்பிய நாடுகள் பலவும் நேட்டோவில் இணைந்தன.

நேட்டோவில் சேரும் உக்ரேனின் விருப்பத்தை ரஷ்யா (முந்தைய சோவியத் ஒன்றியத்தின் அங்கம்) கடுமையாக எதிர்த்தது. தனது எல்லைக்கு மிக நெருக்கமாக நேட்டோவைக் கொண்டு வந்துவிடும் என்பது ரஷ்யாவின் அச்சம்.

ஆனாலும் கடந்த ஏப்ரலில் பின்லாந்தை சேர்த்ததன் மூலம் ரஷ்யாவின் மற்றொரு எல்லைக்கு நேட்டோ வந்து சேர்ந்திருக்கிறது.

உக்ரேனியப் போர் முயற்சியின் தோல்வியைத் தடுக்கவும் ரஷ்யாவை தாக்க நேட்டோ துருப்புக்களை நேரடியாக தாக்க களம் இறக்கலாமா? என்று ஆலோசிக்க ஆரம்பித்து உள்ளனர்.

உக்ரேனை நேட்டோவில் இணைக்கவேண்டும் என்ற கோரிக்கையின் பின்னனியில் நேட்டோவின் சரத்து 5 இன் கீழ் உக்ரேன் வந்து விடும். இதன் விளைவாக அமெரிக்கா ரஷ்யாவுடன் போரில் இறங்க அந்த உடன்படிக்கை உதவும்.

பனிப்போருக்குப் பின்பு முதல் முறையாக ஜெனரல் கவோலி அமெரிக்க மற்றும் நட்பு நாடுகளின் போரிடும் திட்டங்களை ஒருங்கிணைக்கிறார் என்று டைம்ஸ் தெரிவிக்கிறது. ‘அமெரிக்கர்கள் மீண்டும் ஐரோப்பாவின் பாதுகாப்பின் மையத்தில் உள்ளனர். அமெரிக்கா ஐரோப்பாவை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பதை நேட்டோவுடன் துல்லியமாக தீர்மானிக்கிறது’ என்று ஒரு நேட்டோ அதிகாரியை மேற்கோள் காட்டி டைம்ஸ் சுட்டிக் காட்டுகிறது.

நேட்டோவின் ஓர் அழைப்பு, உக்ரேனுக்கு உருக்கொடுக்கும் அல்லது உடைக்கும்” என்று தலைப்பிட்டு நியூ யோர்க் டைம்ஸின் தலையங்கப் பகுதி பிரசுரித்த ஒரு கட்டுரை குறிப்பிடுகையில், “இப்போது இது, மாஸ்கோவின் ஏகாதிபத்திய கனவுகளைப் புதைக்க வேண்டிய நேரம். இப்போது வில்னியஸில் இருந்து, நேட்டோவில் இணையுமாறு உக்ரேனுக்கு ஓர் அரசியல் அழைப்பு விடுப்பதை விட சிறந்த வழி வேறெதுவும் இல்லை,” என்று அது அறிவிக்கிறது.

சக்தி வாய்ந்த 31 ஆப்ராம் டாங்குகளை யுக்ரேனுக்கு அமெரிக்கா தருகிறது. பிரிட்டன் தன் பங்கிற்கு 14 சேலஞ்சர்- 2 ரக டாங்குகளை கொடுக்கிறது. ஜெர்மனி 18 லெப்பர்ட்-–2 டாங்குகளை அனுப்பியுள்ளது. மற்ற நேட்டோ நாடுகளும் டஜன் கணக்கில் அனுப்பியுள்ளன.

போர்க்களத்தில் ரஷ்ய துருப்புகளின் நிலையையும் தாண்டி தாக்குதல் நடத்தக் கூடிய ஹிமார்ஸ் ரக ஏவுகணை அமைப்புகளை யுக்ரேனுக்கு அமெரிக்காவும் பிரிட்டனும் கொடுத்துள்ளன,

இவை எல்லாம் இருந்தும் மொத்த ஐரோப்பிய நாடுகள் ஏன் ரஷியாவை வீழ்த்த இது போன்ற எண்ணங்களை ஆலோசிக்க வேண்டுமா ?

உக்ரேன் தலைநகர் கீவில் ரஷ்யப் படைகளின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தியதில் அமெரிக்காவும் பிரிட்டனும் கொடுத்த டாங்கி எதிர்ப்பு ஆயுதங்களான ஜாவ்லின், ந்லா ஆகியவற்றிற்கு முக்கிய பங்கு உண்டு.

அதேநேரத்தில் நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரேனுக்கு அமெரிக்கா வழங்கவில்லை. அவற்றைப் பயன்படுத்தி ரஷ்ய நிலப்பரப்பில் உக்ரேன் தாக்குதல் நடத்தினால் அது ரஷ்யா – நேட்டோ இடையே நேரடி மோதலுக்கு வழிவகுத்துவிடும் என்பதே அதற்குக் காரணம்.

நடுநிலை வகித்து வந்த பின்லாந்து 2023–-ம் ஆண்டு ஏப்ரலில் நேட்டோ கூட்டமைப்பில் இணைந்தது.

ரஷ்யாவுடன் 1,340 கி.மீ. தூர எல்லையை அது பகிர்ந்து கொண்டுள்ளது. பின்லாந்தின் இணைப்பால், நேட்டோவுக்கு கூடுதலாக 2.57 லட்சம் துருப்புகள் கிடைத்துள்ளன.

பின்லாந்துடன் ஸ்வீடனும் நேட்டோவில் சேர விண்ணப்பித்தது.

நேட்டோவின் மற்ற நாடுகள் அனைத்தும் ஸ்வீடனின் வேண்டுகோளை அங்கீகரித்தாலும் துருக்கி, ஹங்கேரி ஆகிய இரு நாடுகளும் இன்னும் அதனை ஏற்கவில்லை.


Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *