வாழ்வியல்

ரயில் விபத்து தடுக்கும் ‘ரோபோ’ : கரூர் வெற்றி வினாயகா பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு மாணவர் பாரத் கண்டுபிடிப்பு

ரயில் விபத்து தடுக்கும் “ரோபோ’ ரெயிலை கரூர் வெற்றி வினாயகா பள்ளி மாணவர் பாரத் கண்டுபிடித்துள்ளார்.

ரயில் ரயில்கள் தடம்புரண்டு, பயணிகள் கொத்து கொத்தாக உயிர் இழக்கும் கோர சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. இது மனித தவறா, இயந்திர தவறா என்ற இனம்புரியாத கேள்விகளுடன், விபத்துகள் நடப்பது தொடர் கதையாகி வருகின்றன.

விபத்து தடுப்புக் கருவிகளை பொருத்துவது குறித்த திட்டங்கள் நீண்டு கொண்டிருக்க, உயிர் இழப்புகளும் தொடர்ந்து கொண்டு தான் உள்ளன.

ரயில் விபத்தை தடுப்பது எப்படி என்பதை செயல்விளக்கம் காட்டி, விளக்கியுள்ளார் ஒன்பதாம் வகுப்பு மாணவர் ஒருவர். கரூர் வெற்றி வினாயகா மெட்ரிக் பள்ளி மாணவர் பாரத். இந்த மாணவர் தேச சிந்தனையோடு, ரயில் விபத்து தடுப்பு தொழில் நுட்பத்தை கண்டுபிடித்துள்ளார்.

“டிரைன் வே டிராக்கர்’ என்ற தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, ரயில்கள் விபத்தின்றி தடுக்கப்படலாம் என்பது இவரது கண்டுபிடிப்பு.

இதற்கு “வேவ் டிரான்ஸ்மிஷன் ஆன்டெனா’ பொருத்தப்பட்ட ஒரு ரயில் பெட்டி போதும்.

ஆளில்லாத இந்த ரயில் பெட்டி, ஒரு “ரோபோ ரயில்’ போல் செயல்பட்டு, பயணிகள் ரயிலின் முன்னால் சென்று கொண்டிருக்கும்.

பயணிகள் ரயிலுடன் “ரேடியோ பிரிக்குவன்சி வேவ்’ தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு, ரோபோ ரயில் குறிப்பிட்ட இடைவெளியில் முன்னோக்கி சென்று கொண்டிருக்கும். ரயில் தண்டவாளத்தில் சேதம் மற்றும் இதர பாதிப்புகள் இருந்தால், ரோபோ ரயில் தானாகவே நின்று, பின்னால் வரும் ரயிலுடன் தொடர்பு துண்டிக்கப்படும்.

அப்போது, அந்த ரயிலும் தானாகவே நின்று, விபத்தில் இருந்து காப்பாற்றப்படும். இந்த தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ள மாணவர் பாரத் சாதாரண நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். இவரது தந்தை ஒரு ஜவுளி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *