வாழ்வியல்

ரத்த நாளங்களில் ஒட்டிய கொழுப்பைக் கரைக்கும் வாழைப்பூ

வாழைப்பூவின் மருத்துவப் பயன்களை அறிய தொடர்ந்து படியுங்கள் .

வாழைப்பூவைக் வைத்து குழம்பு, பொறியல், வறுவல், துவட்டல், உசிலியல், அடை, வடை, போண்டா, சூப் போன்று பல்வேறு வகையான உணவுகள் தயாரிக்கபடுகின்றன.

வாழைமரத்தின் அனைத்துப் பாகங்களும் நமக்குப் பயன்தரக் கூடியவை. குறிப்பாக வாழைப்பூ அதிகப் பயன்தரக் கூடியது. அற்புத மருத்துவக் குணங்களைக் கொண்ட வாழைப்பூ. வாழைப்பூவில் கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, தாமிரச் சத்து முதலிய சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் வைட்டமின் ஏ, வைட்டமின் பி1 மற்றும் வைட்டமின் சி ஆகிய உயிர்ச்சத்துக்களும் உள்ளன.வாழைப்பூவை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் உள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும். இதனால் இரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து, இரத்தம் வேகமாகச் செல்லும்.

வாழைப்பூவானது இரத்த நாளங்களில் ஒட்டியுள்ள கொழுப்புகளைக் கரைத்து இரத்தத்தை சுத்தமாக்கும். இரத்த அழுத்தம், இரத்த சோகை போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.

Leave a Reply

Your email address will not be published.