வாழ்வியல்

ரத்தத்தை சுத்தம் செய்யும் முளைக் கீரை

தண்டுக் கீரையின் இளஞ்செடியே முளைக் கீரையாகும். முளைக் கீரை எங்கும் தாராளமாகக் கிடைக்கும் கீரை வகையாகும். முளைக் கீரை வருடம் முழுவதும் தடையின்றி கிடைக்கும். முளைக் கீரையானது பச்சை மற்றும் சிவப்பு நிறங்களில் காணப்படும். மித வெப்ப சூழ்நிலையில் இக்கீரை நன்றாக வளரும்.

முளைக் கீரையில் வைட்டமின்களும் தாது உப்புக்களும் அதிக அளவில் இருக்கின்றன. குறிப்பாக சுண்ணாம்புச் சத்து இந்தக் கீரையில் நிறைய இருக்கிறது. மலச்சிக்கல் உள்ளவர்கள் இந்தக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். முளைக் கீரையில் அடங்கியுள்ள இரும்பு மற்றும் தாமிர சத்துக்கள் ரத்தத்தை சுத்தம் செய்து உடலுக்கு அழகையும் மெருகையும் கூட்டுகின்றன. முளைக்கீரை உணவுக்குச் நல்ல சுவையூட்டுவது மட்டுமல்லாமல் பசியையும் தூண்டுகிறது.

முளைக் கீரையை நன்கு கழுவி வெங்காயம், புளி, பச்சை மிளகாய், உப்பு ஆகியவை சேர்த்து வேக வைத்துக் பின்பு கடைந்து உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் உடல்சூடு, ரத்தக் கொதிப்பு, பித்த எரிச்சல் ஆகிய நோய்கள் குணமாகும். அதோடு கண்ணும் குளிர்ச்சியடையும்.

முளைக் கீரையைத் தொடர்ந்து சாப்பிடுவதால், சொறி, சிறங்கு முதலிய நோய்கள் குணமாகின்றன. இந்தக் கீரை வெப்ப சுரத்தைத் தணிக்கிறது. முளைக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான வைட்டமின்களும் தாதுப் பொருட்களும் உடலுக்குப் போதிய அளவில் கிடைக்கும்.

முளைக் கீரையானது சிறந்த மலமிளக்கியாக செயல்படுகிறது. மலச்சிக்கல் உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published.