வாழ்வியல்

ரத்தத்தில் கொழுப்பு படிவதை தடுக்கும் பச்சை பட்டாணி !

வைட்டமின் கே சத்து அதிகம் நிறைந்த பச்சை பட்டாணி தொடர்ந்து சாப்பிட்டால் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் படிவதை தடுத்து உடல் எடை அதிகமாகாமல் காக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள். கண்டுபிடித்திருக்கிறார்கள்.

மேலும் விபரம் அறிய தொடர்ந்து படியுங்கள்:

கொலஸ்ட்ரால் என்பது உணவில் இருக்கும் தீமையான கொழுப்புகள்.

உடலில் ரத்தத்தில் படிந்து எதிர்காலத்தில் இதயம் சம்பந்தமான கோளாறுகளை ஏற்படுத்துகிறது. பச்சை பட்டாணியில் பீட்டா குலுக்கன் சத்து அதிகம் நிறைந்திருக்கிறது. இதை சாப்பிடுவதால் உடலில் கொலஸ்ட்ரால் படிவதை தடுக்கிறது. உடல் எடை அதிகமாகாமல் தடுக்கிறது.

ரத்த சோகை நமது ரத்தத்தில் இருக்கும் சிவப்பு ரத்த அணுக்கள் குறைகிற போது நமக்கு ரத்த சோகை ஏற்படுகிறது. இதை போக்க சத்து நிறைந்த உணவுகளை நாம் சாப்பிடுவது அவசியம். பச்சை பட்டாணியில் ரத்தத்தில் இருக்கும் சிவப்பு ரத்த அணுக்களின் பெருக்கத்தை தூண்டும் சத்துகள் அதிகமுள்ளது. இதை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு ரத்த சோகை பிரச்சனை நீங்கும். மனநலம் நமது உடல் எந்த அளவிற்கு ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியமோ, அதே அளவிற்கு மனநலமும் நன்றாக இருக்க வேண்டியது அவசியம். மேலை நாடுகளில் நடைபெற்ற ஆய்வுகளில் தினமும் 100 கிராம் பச்சை பட்டாணி சாப்பிட்டு வந்த மனநலம் சார்ந்த பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மனநிலை மற்றும் உடல் நிலையில் சிறந்த குணம் ஏற்பட்டதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *