கருவேப்பிலை உட்கொள்வது இரத்த சோகையால் பாதிக்கப்படுபவர்களுக்கு நன்மை பயக்கிறது. மேலும் கருவேப்பிலையில் உள்ள ஃபோலிக் அமிலம்
இரும்பை உறிஞ்சுவதற்கு உடலுக்கு உதவுகிறது. ஃபோலிக் அமிலம் குறைபாடு காரணமாக இரும்புச்சத்து சரியாக உறிஞ்சப்படாமல் உடலில் இருந்து வெளியேற்றப்படுகிறது.
கறிவேப்பிலை உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைக்க உதவுகிறது. மேலும் எடை இழப்புக்கு உதவுகிறது. இது இதயத்தில் இருந்து அதிகப் படியான அழுத்தத்தை நீக்குகிறது. கறிவேப்பிலையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.