சினிமா போஸ்டர் செய்தி

ரஜினியின் ‘தர்பார்’ : ஏ.ஆர்.முருகதாஸ் – டைரக்டர்

சென்னை, ஏப். 9–

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்துக்கு ‘தர்பார்’என்று தலைப்பிட்டு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.

‘பேட்ட’ படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 167-வது படமான தர்பார் படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளார். இதற்கான முதற்கட்ட தயாரிப்புப் பணிகளில் லைகா நிறுவனம் படக்குழு ஈடுபட்டு வந்தது.

நாளை (ஏப்ரல் 10) மும்பையில் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இணையத்தில் இன்று காலை 8.30 மணிக்கு வெளியிட்டுள்ளது படக்குழு. ‘தர்பார்’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் ரஜினி காவல்துறை அதிகாரியாக நடிக்கவுள்ளார். மேலும், அடுத்த (2020) பொங்கலுக்கு இப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது

சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். நயன்தாரா, யோகி பாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் ரஜினியுடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். சந்திரமுகி படத்திற்கு ரஜினியுடன் இப்படத்தில் நயன்தாரா நடிக்கிறார்.

ஏ.ஆர்.முருகதாஸ் – ரஜினிகாந்துடன் முதன்முறையாக இணைவதால், படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தர்பார் படத்தில் போலீஸ், சமூக சேவகர் என இரட்டை வேடத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *