செய்திகள்

யூடியூப் சேனலை உருவாக்குவது எப்படி? ஜூலை 22ந் தேதி முதல் 3 நாள் பயிற்சி

Makkal Kural Official

தமிழக அரசு ஏற்பாடு

சென்னை, ஜூலை 19–

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சென்னையில் ‘‘யூ டியூப் சேனலை எவ்வாறு உருவாக்குதல்’’ தொடர்பான பயிற்சியானது வரும் 22–ந் தேதி முதல் 24–ந் தேதி வரை 3 நாட்கள் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரையில் இந்நிறுவனத்தின் கட்டிடட வளாகத்தில் நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் நீங்கள் எவ்வாறு யூடியூப் சேனலை எவ்வாறு உருவாக்குதல் மற்றும் பொருட்களை சந்தைப்படுத்தல் தொடர்பான நேரடி பயிற்சி வகுப்பின் மூலமாக கற்றுக் கொடுக்கப்படும்.

ஆர்வமுள்ளவர்கள் (ஆண், பெண், திருநங்கைகள்) 18 வயதிற்கு மேற்பட்ட, குறைந்தப்பட்ச கல்வித் தகுதியாக 10-ம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சியில் பங்குப் பெறும் ஆண், பெண், திருநங்கைகள் தங்கிப் பயில்வதற்கு ஏதுவாக குறைந்த கட்டண வாடகையில் குளிரூட்டப்பட்ட தங்கும் விடுதி உள்ளது. தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து முன் பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும், இப் பயிற்சிப்பற்றிய விவரங்களை அறிய விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். அலுவலக வேலை நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, இ.டி.ஐ.ஐ அலுவலக சாலை, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை. 044-22252081, 22252082, 8668100181, 9841336033 ஆகிய தொலைபேசி அல்லது கைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். முன்பதிவு அவசியம். பயிற்சியின் முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *