செய்திகள்

யுகாதி : மலர்க் கொத்துடன் கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு முதல்வர் எடப்பாடி வாழ்த்து

Spread the love

சென்னை, மார்ச் 25–

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, இன்று யுகாதி திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு மலர்க்கொத்துடன் வாழ்த்துக் கடிதம் அனுப்பினார்கள். அந்தக் கடிதத்தின் விவரம் பின்வருமாறு :

யுகாதி திருநாளில் உங்களுக்கும், உங்களது மனைவிக்கும், குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் இதயங்கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நன்னாளில் அமைதியும், சுபீட்சமும், மகிழ்ச்சியும் தங்களுக்கும், குடும்பத்தினருக்கும் கிடைக்கட்டும் என்று அந்தக் கடிதத்தில் கூறியுள்ளார்.

அப்போது, தனக்கு வாழ்த்து தெரிவித்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு தனது நன்றியினை கவர்னர் தெரிவித்துக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *