செய்திகள்

யக்‌ஷா கலை திருவிழாவில் சம்ஸ்கிரிதி மாணவர்களின் பரத நாட்டிய நிகழ்ச்சி

கோவை, மார்ச் 12–

ஈஷாவில் நடைபெற்று வரும் 3 நாள் யக்‌ஷா கலைத் திருவிழாவின் நிறைவு நாளான நேற்று (மார்ச் 10) சம்ஸ்கிரிதி மாணவர்களின் பரத நாட்டிய நிகழ்ச்சி நடந்தது.‘சரூப்யம்’ என்ற கருப்பொருளில் நடந்த இந்த பரத நாட்டியத்தில் அவர்களின் நடன ஆசிரியர்களான திவ்யா நாயர் மற்றும் ராதே ஜகி ஆகியோருடன் சம்ஸ்கிரிதி மாணவர்கள் இணைந்து நடனம் ஆடினர்.

வினு கோபால் வாய்ப்பாட்டும், ரமேஷ் பாபு மிருதங்கமும், பிரிஷ்டி நட்டுவாங்கமும் வாசித்தனர்.

மார்ச் 8-ம் தேதி தொடங்கிய யக்‌ஷா கலைத் திருவிழா நேற்றுடன் நிறைவு பெற்றது. இன்று (மார்ச்11) மஹாசிவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *