செய்திகள்

மோட்டார் வாகனப் பராமரிப்புத் துறையில் கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணை

Spread the love

சென்னை, ஜூலை 20–

மோட்டார் வாகனப் பராமரிப்புத் துறையில், கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்.

போக்குவரத்துத் துறையின் ஒரு அங்கமாக இயங்கிவரும் தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்புத் துறையின் சார்பில் அனைத்து அரசு துறைகளின் வாகனங்களின் பராமரிப்புப் பணிகளை திறம்பட மேற்கொண்டு வருகிறது. இம்மோட்டார் வாகனப் பராமரிப்புத்துறையில் பணியில் இருந்த பொழுது உயிரிழந்த சென்னை, திருச்சி மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த 3 அரசு ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில், இளநிலை உதவியாளருக்கான பணி நியமன ஆணையினை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமைச் செயலகத்தில் வழங்கினார்.

இந்நிகழ்வின்போது போக்குவரத்துத்துறை அரசு முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் மோட்டார் வாகனப் பராமரிப்புத்துறையின் இயக்குநர் (பொறுப்பு) கே.செந்தில்வேல் ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *