செய்திகள்

மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு அழிவுப்பாதைக்கு செல்லும்: காங்கிரஸ் கட்சி காட்டம்

டெல்லி, அக். 9–

பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு அழிவுப் பாதைக்கு செல்லும் என எதிர்க்கட்சியான காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

கேரள சட்டப்பேரவையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ரமேஷ் சென்னிதலா, டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது:–

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது எனத் திட்டமிட்ட நோக்கத்துடன் காங்கிரஸ் முழு முயற்சியுடன் செயல்பட்டு வருகிறது. நரேந்திர மோடி அரசு 3 வது முறையாக ஆட்சிக்கு வந்தால் அது நாட்டை அழிவுக்குக் கொண்டுசெல்லும், அதில் எந்த சந்தேகமும் இல்லை. அதனால் தான் பாஜகவுக்கு எதிராக அனைத்து மதச்சார்பற்ற குழுக்களையும் ஒன்றினைத்து போராடக் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

ஆபத்தை தவிர்க்க வேண்டும்

பாஜக 3 வது முறையாக ஆட்சிக்கு வந்தால், நாடு “தீராத ஆபத்திற்கு சென்றுவிடும். நாடு இந்த உண்மையை உணர்ந்துள்ளது, இந்த ஆபத்து தவிர்க்கப்பட வேண்டும் என்பது பொதுமக்களின் கருத்து. எனவே, பாஜகவைத் தோற்கடித்து, 3 வது முறையாக மீண்டும் ஆட்சிக்கு வராமல் இருப்பதை உறுதிசெய்யும் நோக்கத்துடன் மதச்சார்பற்ற எண்ணம் கொண்ட குழுக்கள் மற்றும் மக்கள் ஒன்றிணைந்த முன்னணி உருவாக்கப்பட்டது என்று கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *