செய்திகள்

மோடி பிறந்த நாள்: மலர்க்கொத்துடன் எடப்பாடி, ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

சென்னை, செப். 17

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்று (17ந் தேதி) பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி, மலர்கொத்துடன் வாழ்த்துக் கடிதம் அனுப்பினார்.

அந்தக் கடிதத்தின் விவரம் பின்வருமாறு:-

“உங்களுடைய பிறந்தநாளான மகிழ்ச்சிக்குரிய இந்நாளில், இனி வரும் ஆண்டுகள் அற்புதமாக அமைய என்னுடைய இதயப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நம் நாட்டுக்கு பணியாற்ற நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன், வல்லமையோடு இன்னும் பல ஆண்டுகள் வாழ… எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்’’

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம்

இதேபோல துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் வாழ்த்துக் கூறியுள்ளார். இவர், தனது டுவிட்டரில், “எங்கள் பிரதமர் நரேந்திர மோடிஜிக்கு அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள். யாரும் எட்டமுடியாத உயரத்துக்கு நம் தேசத்தை அழைத்துச் செல்வதற்கான அவரது இலக்கில், அவருக்கு நல்ல ஆரோக்கியமும், வெற்றியும் கிடைக்க வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *