செய்திகள்

மோடி படத்துடன் ரெயில் டிக்கெட் வினியோகம்: ரெயில்வே ஊழியர்கள் 4 பேர் சஸ்பெண்ட்

லக்னோ, ஏப்.16–

உத்திரப்பிரதேசத்தில் பிரதமர் மோடி படத்துடன் ரெயில் டிக்கெட் விநியோகம் செய்த 2 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யபட்டனர்.

தேர்தல் விதிமீறல் எனக்கூறி பாராபங்கி ரெயில் நிலையத்தில் இந்த 4 ஊழியர்களை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்து உள்ளனர். இது விஷயத்தில் விசாரணை மேற்கொள்ளுமாறு மாவட்ட கூடுதல் நீதிபதிக்கு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. கடந்த 10 நாட்களாகவே இது மாதிரி, மோடி படத்தோடு டிக்கெட் வழங்கப்பட்டதாகத் தெரிய வந்தது.

தவறுதலாக இப்படி வழங்கப்பட்டு விட்டது என்று சம்பந்தப்பட்டவர்கள் விளக்கம் தந்தனர். இருந்தும் அதை ஏற்காத ரெயில்வே நிர்வாகம் அந்த 4 ஊழியர்களையும் சஸ்பெண்ட் செய்துள்ளது.

மார்ச் 10ந் தேதிக்குப் பிறகு மோடி படத்தோடு டிக்கெட் வழங்கப்படக் கூடாது என்ற உத்தரவு, இங்கே 10 நாட்களாக மீரப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *