தலையங்கம்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி – அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையிலான வெள்ளை மாளிகை சந்திப்பு இரு நாடுகளுக்கிடையிலான வியாபாரம், வரி ஒழுங்குகள் மற்றும் குடியேற்ற பிரச்சினைகள் பற்றி முக்கியமான பேச்சுவார்த்தைகளை நடத்திட வழிவகுத்தது..
இரு நாள் அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்ற மோடி, டிரம்பை நேரில் சந்தித்தார். இந்த சுமார் 90 நிமிட சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக பற்றாக்குறையை சீர்செய்யும் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு அதிக எண்ணெய் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்யும் புதிய ஒப்பந்தங்களை டிரம்ப் அறிவித்ததும் இருந்தார்.
வர்த்தக , வரி வரைமுறைகளில் அமெரிக்கா-இந்தியா இடையிலான புதிய பரஸ்பர திட்டத்தை டிரம்ப் அறிவித்தார். இந்தியாவிடம் இருந்து தற்போது வசூலிக்கப்படும் வரியை சமநிலையாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மாநாடுகள் , வளர்ச்சிக் கூட்டாண்மைகள்: பிரதமர் மோடி, டிரம்பின் ‘MAGA’ (Make America Great Again) எண்ணத்தை மேற்கோள் காட்டி, இந்தியாவையும் ‘MIGA’ (Make India Great Again) உருவாக்க வேண்டுகோளை வைத்தார். “இந்த இரு சிந்தனைகளும் இணைந்து ‘MEGA’ மெகா பொருளாதாரக் கூட்டாண்மையாக மாறும்” என்று மோடி கூறினார். இது இந்தியா-அமெரிக்கா ஆகிய இரு ஜனநாயக நாடுகளின் வளர்ச்சியை மெருகேற்றும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
சட்டவிரோதமாக அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும் விவாதங்கள் நடத்தப்பட்டன. அப்படி குடியேற்றங்கள் நிரூபணமாக இருந்தால் அவர்கள் அனைவரையும் இந்தியாவிற்கு அழைத்துச் செல்ல தயாராக இருக்கிறோம் என பிரதமர் மோடி உறுதியளித்தார். அதே சமயம், நயவஞ்சகத்தால் பாதிக்கப்படுகிற இந்திய இளைஞர்கள் – குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இச்சந்திப்பின் போது, 2008 மும்பை தாக்குதலுக்காக திட்டமிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை ஒப்படைக்க அமெரிக்கா முடிவெடுத்ததற்கு மோடி நன்றி தெரிவித்தார். இது பயங்கரவாதத்தை எதிர்க்கும் இருநாட்டின் ஒத்துழைப்பை மெருகேற்றும் முனைப்பு எனும் நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.
கூட்டமைப்பு பேச்சுவார்த்தைகள் மற்றும் சர்வதேச தொடர்புகள் பற்றி பேசுகையில், ரஷ்யா அதிபர் புதினுடன் டிரம்ப் மேற்கொண்ட அழைப்பின் பின்னனி விவரங்கள் மற்றும் யுக்ரேன் போருக்கு முடிவுகாண முயற்சிகள் குறித்து டிரம்ப் விவரித்துள்ளார்.
மொத்ததில் இந்தச் சந்திப்பு இந்தியா-அமெரிக்கா இரு நாடுகளின் வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் மனிதநேயத் தொடர்புகளை வலுப்படுத்துவதற்கு வழிவகுத்ததோடு உலக அரங்கில் இருநாடுகளின் நீண்டகால கூட்டாண்மையின் அடிப்படை வழித்தடங்களை அமைத்ததைக் காட்டுகிறது. இந்தச் சந்திப்பின் பலனாக சர்வதேச அரசியல் நெருக்கடிகளைத் தணிக்கும் என்று சர்வதேச விவகாரங்களை உற்று நோக்கும் நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.