செய்திகள்

மோடி ஆட்சியில் வேலையின்மையும் ஊழலும் பெரும் பிரச்சினை: ஆய்வுத் தகவல்

டெல்லி, ஏப். 12–

பிரதமர் மோடியின் ஆட்சியில் வேலையின்மை 62 சதவீதமாகவும், ஊழல் அதிகரிப்பு 55 சதவீதமாகவும், விலைவாசி 76 சதவீதம் உயர்ந்துள்ளது தான் பெரும் பிரச்சினை என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக அறிவியல் மற்றும் மனித நேய ஆராய்ச்சி நிறுவனமான சிஎஸ்டிஎஸ் அமைப்பு, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம், தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பினை ஆன்லைன் வாயிலாக மேற்கொண்டதாக தெரிவித்துள்ளது. ’சிஎஸ்டிஎஸ் – லோக்நிதி’ (CSDS-Lokniti ) என்ற அமைப்பு மேற்கொண்ட தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு, பாஜகவுக்கு அதிர்ச்சியூட்டும் முடிவுகளை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வேலைவாய்ப்பில்லை

’கடந்த காலத்தை விட தற்போது வேலை தேடுவது கடினமாகி உள்ளது’ என கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் 62 சதவீதத்தினர் தெரிவித்துள்ளனர். ஆண் – பெண் விகிதத்தின் அடிப்படையில் பார்த்தால் 65 சதவீத ஆண்களும் 59 சதவீத பெண்களும் வேலை கிடைப்பது சிரமமாக இருப்பதாகக் கூறியுள்ளனர். அதேவேளை, இந்து உயர்சாதியினர் தரப்பில் 17 சதவீதம் பேர் வேலை வாய்ப்பு கிடைப்பது எளிதாக இருப்பதாகவும், அவர்களில் 57 சதவீதம் பேர் வேலை கிடைப்பது சிரமம் எனத் தெரிவித்துள்ளனர்.

ஊழல், விலைவாசி உயர்வு

விலைவாசி உயர்வை பொருத்தவரை மோடியின் ஆட்சியில் 71 சதவீதம் பேர் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது என்று கருத்து தெரிவித்துள்ளனர். ஏழை மக்களில் 76 சதவீதம் பேர் விலைவாசி மிகவும் அதிகரித்துவிட்டதாகவும், முஸ்லிம்களில் 75 சதவீதம் பேர் விலைவாசி உயர்வு தாக்கம் அதிகமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

2019 ஆம் ஆண்டும் மக்களவைத் தேர்தலுக்கு முன்னரு ம்கூட லோக்நிதி இதேபோல் தேர்தலுக்கு முந்தைய ஆய்வு (ப்ரீ போல் சர்வே) நடத்தியது. அப்போது இருந்ததைவிட இப்போதைய ஆய்வில் 55 சதவீதம் பேர் ஊழல் அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளனர். நாட்டின் பெரும் பிரச்சினைகளில் வேலையின்மைக்கு அடுத்தபடியாக அதிகரித்துள்ள ஊழல் விளங்குகிறது. கடந்த 5 ஆண்டுகளில் ஊழல் அதிகரித்திருப்பதாக 55 சதவீதத்தினர் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 63 சதவீதத்தினர் விவசாயிகளுக்கும் அவர்களின் போராட்டத்துக்கும் ஆதரவு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *