சென்னை, மே 13–
தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 472 ரூபாய் சரிந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.38,112-க்கு விற்பனையாகிறது.
கடந்த 2 வாரமாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடனே இருந்து வருகிறது. நேற்று முன்தினம் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.472 சரிந்த நிலையில் நேற்று 240 ரூபாய் வரையில் உயர்ந்தது. இந்த நிலையில் இன்று காலை ஆபரண தங்கம் கிராமுக்கு 59 ரூபாய் குறைந்து, ரூ.4,764 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு சவரனுக்கு ரூ.472 குறைந்து ஒரு பவுன் விலை விலை ரூ.38,112-க்கு விற்பனையாகிறது.
வெள்ளியும் சரிவு
அதேபோல் ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 64,600 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 1,200 ரூபாய் குறைந்து ரூ.63,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஒரு கிராம் வெள்ளி ரூ.63.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.