செய்திகள்

மே மாதத்தில் ரூ.1 லட்சத்து 41 ஆயிரம் கோடி ஜி.எஸ்.டி. வசூல்

ஏப்ரல் மாதத்தை விட குறைவு

புதுடெல்லி, ஜூன் 2-–

கடந்த மே மாதத்தில், ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்து 885 கோடி கிடைத்துள்ளது. கடந்த சில மாதங்களாக ஜி.எஸ்.டி. வசூல் மாதந்தோறும் அதிகரித்து வந்தது. ஆனால், கடந்த மார்ச் மாதம் ரூ.1 லட்சத்து 42 ஆயிரம் கோடியும், ஏப்ரல் மாதம், சாதனை அளவாக ரூ.1 லட்சத்து 68 ஆயிரம் கோடியும் வசூலான நிலையில், மே மாத வசூல் குறைந்துள்ளது.

இருப்பினும், கடந்த ஆண்டு இதே மே மாதத்தில் ரூ.97 ஆயிரத்து 821 கோடி தான் வசூலானது. அதனுடன் ஒப்பிடுகையில் இது 44 சதவீதம் அதிகம் ஆகும். தொடர்ந்து 3–-வது மாதமாக ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் கோடியை தாண்டி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.