தலையங்கம்
மேலே போய்விட்டார் என்பது அமங்கலமான சொற்றொடர். ஆனால் அது இனி அயல் நாட்டுக்கு சென்று வருவது போல் ஆகிவிடும்!
மிகக் குறைந்த பேர்தான் இதுவரை பூமியின் வெளிவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ள விஞ்ஞானக் களத்தில் தங்கிப் புவி ஈர்ப்பற்ற நிலையில் அந்தரத்தில் நிலையற்ற வகையில் வாழும் வழியை உணர்ந்து பணியாற்றுகிறார்கள்.
அவர்களில் நாசா விண்வெளியாளர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ஷ் வில்மோர் ஆகியோரின் நீண்டுகொண்டிருக்கும் பயணம், மனித விண்வெளிப் பயணத்தின் சிக்கல்களையும் பொதுமக்கள் -தனியார் கூட்டணிகளின் மேம்பாட்டையும் நமக்கு புது விழிப்புணர்வைத் தருகிறது.
எட்டு நாள் பயணத்திற்குப் பிறகு திரும்பத் திட்டமிடப்பட்டிருந்த இந்த ஜோடி, போயிங்கின் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக ஜூன் 2024 முதல் விண்வெளியில் சிக்கித் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
விண்வெளி வீரர்களைப் பூமிக்கு அழைத்து வர ஸ்பேஸ் எக்ஸுடன் இணைந்து செயல்படுவதாக நாசா இப்போது உறுதிப்படுத்தியுள்ளது,
பிப்ரவரி திரும்பும் திட்டத்தை அதாவது 15 நாட்களில் என்பது மாறி, 40 நாட்களில் , குறைந்தபட்சம் மார்ச் மாதத்தில் என உறுதி தந்துள்ளது.
இந்த முடிவு விண்வெளி வீரர்களின் பயணத்தை ஒருங்கிணைப்பதில் உள்ள சிக்கலான பல அம்சங்களை பிரதிபலிக்கிறது. அதே நேரத்தில் பணிப் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் ISS அட்டவணையில் இடையூறுகளைக் குறைப்பதிலும் உள்ளது. தாமதம் ஓரளவுக்கு Crew-10 இன் வரவிருக்கும் ஏவுதலின் காரணமாகும். இது வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் உட்பட Crew-9 விண்வெளி வீரர்களின் வருகையுடன் கவனமாக ஒத்திசைக்கப்பட வேண்டும்.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவரான எலோன் மஸ்க், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனிப்பட்ட முறையில் விண்வெளியாளர்களை விரைவாக மீட்குமாறு கேட்டதாக கூறப்படுகிறது.
போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலத்தின் தொழில்நுட்பக் கோளாறுகள், நாசாவின் பலத்த எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய முடியாத நிலையை ஏற்படுத்தியது. ‘கூரு டிரேகான்’, Crew Dragon, விண்கலத்தை பயன்படுத்த ஸ்பேஸ் எக்ஸ் முன் வந்து இருப்பதால் ஸ்டார்லைனர் விண்கலத்திற்கான எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. விண்வெளி வீரர்களின் மீட்பு தொடர்பான தாமதம், போயிங் நிறுவனத்திற்கும் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
ஒரு வாரப் பயணம் இப்படிக் கிட்டத்தட்ட ஒரு வருட சிக்கலாக மாறியிருப்பது விண்வெளிப் பயணத்தின் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை குறித்து கேள்விகளை எழுப்புகிறது. ஆனால் போயிங் நிறுவனத்துடன் எஸ்பேஸ் எக்ஸ் இணைந்து செயல்பட முன்வந்து இருப்பது வரலாற்று சிறப்புமிக்க ஒன்று, காரணம் இப்படி பல முன்னணி நிறுவனங்கள் இணைந்து செயல்பட்டால் வானமும் வசப்படும் அல்லவா?
வில்லியம்ஸ் மற்றும் வில்மோர், இந்தச் சிக்கல்கள் கொண்ட தலைவலிகளை கடந்து விண்வெளி ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று 6.5 மணி நேர விண்வெளி நடைப்பயணம் மேற்கொண்டு உள்ளனர். அதில், ISS வெளிப்புறத்தில் உயிரணு மாதிரிகளைச் சேகரித்தனர். இதன் மூலம் பூமிக்கு வெளியே உயிரணுக்களின் பரவல் பற்றிய ஆராய்ச்சி மேம்படுத்தப்படுகிறது. இது நிலவு, செவ்வாய் போன்ற பிற கிரகங்களில் மனிதர் சென்றால் ஏற்படக்கூடிய தொற்றுக்களைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கையாக விளங்குகிறது.
விண்வெளிப் பயணத்திற்கான எதிர்காலமாக, இந்த விண்வெளி தாமதம், விண்வெளிப் பயணத் துறையின் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை குறித்து கேள்விகளை எழுப்புகிறது.