செய்திகள்

மேற்கு வங்கத்தில் 4-ஆம் கட்ட தேர்தல்: பாஜக–திரிணாமுல் மோதலில் 4 பேர் சுட்டுக்கொலை

கொல்கத்தா, ஏப். 10–

மேற்குவங்க தேர்தலில், சிஐஎஸ்எப் படையினர் துப்பாக்கிசூடு நடத்தியதில் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 3 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளது. இன்று 4-ஆம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுவரை மூன்று கட்டங்களாக 91 தொகுதிகளில் சட்டசபை வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. இன்று நான்காம் கட்டமாக 44 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

ஹவுரா, தெற்கு 24 பர்கானாஸ், ஹூக்ளி, அலிபுரத்துவார், கூச் பெஹார் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. இன்று காலை முதலே பொதுமக்கள் ஆர்வத்துடன் நின்று வாக்களித்து வருகின்றனர். அங்கு இன்று காலை 9.30 மணி வரை 15.85% வாக்குகள் பதிவாகியுள்ளது.

இதில், கூச் பெஹார் பரபரப்பான மாவட்டமாஹா கருதப்படுகிறது. இதனையடுத்து, அங்கு மத்திய ஆயுதப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இந்நிலையில், அங்கு பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், சிஐஎஸ்எப் படையினர் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். இதில் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *