செய்திகள்

மேற்கு வங்கத்தில் மாயமான வங்கதேச எம்.பி.யின் உடல் சடலமாக மீட்பு

Makkal Kural Official

கொலையா? போலீஸ் விசாரணை

கொல்கத்தா, மே 22–

மேற்கு வங்கத்தில் மாயமான வங்கதேச எம்.பி.யின் உடல் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளது. இது திட்டமிட்டு செய்த கொலை போல் தெரிகிறது என போலீசார் தெரிவித்தனர்.

வங்கதேசத்தில் ஆளும் அவாமி லீக் கட்சியின் எம்.பி. அன்வருல் அசீம். இவர் கடந்த 14ம் தேதி வங்கதேசத்திலிருந்து மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்வதற்காக மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவிற்கு வந்துள்ளார். பாராநகரில் தனது நண்பர் வீட்டில் தங்கியிருந்த நிலையில் அவர் மாயமானார். இது பற்றி போலீசில் வங்கதேச தூதரகம் புகார் அளித்திருந்தது. இது குறித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வந்த நிலையில், அன்வருல் அசீம் உடல் இன்று சடலமாக மீட்கப்பட்டது.

இது குறித்து போலீசார் கூறுகையில், ‛‛8 நாட்களாக தீவிர விசாரணை நடத்தி வந்தோம். ஒரு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, இன்று கொல்கத்தாவில் நியூ டவுனில் உள்ள சஞ்சீவா கார்டனின் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து அவரது உடல் மீட்கப்பட்டது. இது திட்டமிட்டு செய்த கொலை போல் தெரிகிறது என தெரிவித்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *