செய்திகள்

மேற்குவங்க சட்டசபை தேர்தல்: 800 பொதுக் கூட்டங்களை நடத்த பாரதீய ஜனதா திட்டம்

கொல்கத்தா, மார்ச் 4–

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற பிரதமர் மோடி 20 பொதுக்கூட்டங்களில் பேசுகிறார்.

மேற்கு வங்கத்தில் 800-க்கும் அதிகமான பொதுக்கூட்டங்கள் நடத்த பாரதீய ஜனதா கட்சி திட்டமிட்டுள்ளது. இதி்ல் அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்ட தேசிய தலைவர்கள் பேச இருக்கிறார்கள்.

இந்தியாவின் 14வது மிகப்பெரிய மாநிலம் மேற்கு வங்கம் ஆகும். ஒட்டுமொத்தமாக 9 கோடி மக்கள் தொகை கொண்ட மேற்குவங்கத்தில், 77 சதவீதம் பேர் கல்வி அறிவு கொண்டவர்களாக உள்ளனர்.

இந்தியாவின் தொழில்துறை உற்பத்தியில் 9.8 சதவீதம் பங்கை இம்மாநிலம் வகிக்கிறது. வரும் மார்ச் 27-ல் தொடங்கி 8 கட்டங்களாக அங்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தற்போதைய முதலமைச்சராக மம்தா பானர்ஜி உள்ளார். அவரிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற பாரதீய ஜனதா கட்சி திட்டமிட்டு 800 பொதுக் கூட்டங்கள் நடத்த முடிவு செய்துள்ளது.

இதில் பிரதமர் மோடி மார்ச் 7 ல் தொடங்கி 20 கூட்டங்களில் கலந்துகொண்டு பேசுகிறார். மத்திய அமைச்சர் அமித்ஷா, கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் தலா 60 கூட்டங்களில் பேச உள்ளனர். மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பாரதீய ஜனதாவின் பிற தலைவர்களும் இக்கூட்டங்களில் பேச இருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *