செய்திகள்

மேம்படுத்தப்பட்ட இனோவா கிறிஸ்டா, பார்சூனர் கார்

கோவை, ஏப். 15

டொயோடா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் தனது மேம்படுத்தப்பட்ட இனோவா கிறிஸ்டா, பார்சூனர் கார்களை அறிமுகம் செய்துள்ளது.

இனோவா கிறிஸ்டா கார்கள் எக்ஸ் ஷோரூம் விலையாக ரூ.14 லட்சத்து 93 ஆயிரம் முதல் ரூ.22 லட்சத்து 43 ஆயிரம் வரையிலும், இனோவா டூரிங் ஸ்போர்ட் கார்கள் எக்ஸ் ஷோரூம் விலையாக ரூ.18 லட்சத்து 92 ஆயிரம் முதல் ரூ.23 லட்சத்து 47 ஆயிரம் வரையிலும் விற்பனைக்கு வந்துள்ளது.

2005 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இனோவா கார்கள் இதுவரை 8 லட்சம் கார்கள் விற்று சாதனை படைத்துள்ளது. இதேபோல் 2016 ஆம் ஆண்டில் அறிமுகமான இனோவா கிறிஸ்டா 2 லட்சத்து 25 ஆயிரம் கார்கள் விற்பனையாகி உள்ளது.

பார்சூனர் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.27 லட்சத்து 83 ஆயிரம் முதல் ரூ.33 லட்சத்து 60 ஆயிரம் வரை விற்பனையாகிறது.

2009 ம் ஆண்டில் அறிமுகமான பார்சூனர் இதுவரை 1 லட்சத்து 50 ஆயிரம் கார்கள் விற்பனையாகி உள்ளது.

மேம்படுத்தப்பட்ட புதிய கார்களை அறிமுகம் செய்து வைத்து அந்நிறுவனத்தின் துணை நிர்வாக இயக்குனர் என்.ராஜா கூறுகையில், வாடிக்கையாளர்களுக்கு முதலிடம் என்னும் தத்துவத்தின் அடிப்படையில் நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.

மாறுபட்டு வரும் வாழ்க்கை முறையில் தற்போது பெரும்பாலானவர்கள் தங்கள் குடும்பத்துடன் வார விடுமுறைகளை

கழிக்க விரும்புகிறார்கள். எனவே அவர்கள் கார்களில் அதிக தூரம் பயணம் செய்கிறார்கள். அப்போது அவர்கள் சொகுசான பயணத்தையே விரும்புகிறார்கள்.

அதனை கருத்தில் கொண்டு தற்போது வெளிவந்துள்ள கார்களின் பாதுகாப்பு, வசதிகள் மற்றும் உள்புற வடிவமைப்பு ஆகியவை மேம்படுத்தப்பட்டுள்ளன. இந்த மேம்பாடு, எங்களின் வாடிக்கையாளர்களை மேலும் அதிகரிக்கச் செய்யும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *