செய்திகள்

மேட்ரிமோனி பரிசு மோசடி: ரூ.3 கோடி இழந்த பெண்; 2 நைஜிரியர்கள் கைது

சென்னை, பிப். 12–

திருமணம் செய்து கொள்ள மேட்ரிமோனி இணைதளத்தில் பதிவிட்ட பெண், ரூ. 3 கோடியை இழந்துள்ளார்.

சென்னை கலைஞர் கருணாநிதி நகரில் வசித்து வரும் பெண், மருத்துவத்துறையில் பணிபுரிந்து வருகிறார். இந்த பெண், மேட்ரிமோனி இணையதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அப்போது அலக்சாண்டர் சாஞ்சி என்பவருடன் பொருத்தம் இருப்பதாக தகவல் வந்துள்ளது. இதைத்தொடர்ந்து இருவரும் வாட்ஸ் ஆப்பில் பேசி உள்ளனர்.

மேலும் நைஜிரியாவை சேர்ந்த இவர், அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகவும். சென்னையில் அவரை பார்க்க வருவதாகவும். தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து, அந்த பெண்ணுக்கு பரிசுகளை அனுப்பியதாகவும் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து அந்த பெண்ணுக்கு சுங்கத்துறை அதிகாரிகள் பேசுவதாக அழைப்பு வந்துள்ளது.

ரூ.2.7 கோடி மோசடி

இந்நிலையில் டெல்லியில் இருந்து பேசுவதாக தெரிவித்த நபர்கள், பரிசு பொருட்களை பெற பணம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இந்தப் பெண் கிட்டதட்ட ரூ.2.7 கோடி வரை பல்வேறு வங்கிக்கணக்கிற்கு செலுத்தி உள்ளார். மேலும் இது மோசடி என்று கண்டறிய 2 மாதங்கள் தேவைப்பட்டுள்ளது. இவரிடம் மேட்ரிமொனி தளத்தில் பேசிய அலக்சாண்டர் சாஞ்சியையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.

இதனைத் தொடர்ந்து கலைஞர் நகர் பெண் மாநகர காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவை அணுகி உள்ளார். அதனைத் தொடர்ந்து, இந்த பெண் பணம் செலுத்திய வங்கிக் கணக்கின் தகவலை வைத்து, டெல்லியில் இந்த பணம் எடுக்கப்பட்டுள்ளது என்பதை காவல்துறையினர் கண்டறிந்தனர்.

இந்நிலையில் காவல்துறையின் சிறப்பு குழு, டெல்லிக்கு சென்று, நைஜீரியாவை சேர்ந்த அகஸ்டின் மதுயபுஜி ( வயது 29), சினிடு ஒன்யேயோபி ( வயது 36 ) ஆகியோரை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து அவர்களை சென்னைக்கு அழைத்து வந்து காவலில் வைத்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *