மேட்டூர், ஜன. 12–
காவிரியில் நீர்வரத்து குறைந்ததால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 112.89 அடியாக சரிந்துள்ளது.
காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. நேற்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,327 கனஅடியாக இருந்தது. இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,547 கனஅடியாக சற்று அதிகரித்துள்ளது.
112.89 அடியாக குறைந்தது
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கனஅடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் நேற்று காலை 113.54 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 112.89 அடியாக குறைந்தது. அணையின் நீர் இருப்பு 82.58 டி.எம்.சியாக உள்ளது.