மேட்டூர், ஜன. 2–
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 118.31 அடியாக குறைந்தது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 118.31 அடியாக குறைந்த நிலையில், அணைக்கு நீர்வரத்து 3942 கன அடியாக உள்ளது. காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தாலும், கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படாததாலும் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக சரிந்து வருகிறது.
நீர்மட்டம் 118.31 அடி
மேட்டூர் அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 4,081கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர் வரத்து, இன்று காலை வினாடிக்கு 3942 கன அடியாக சரிந்தது. மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கன அடி வீதமும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணை நீர்மட்டம் 118.31 அடியாக சரிந்தது. அணையின் நீர் இருப்பு 90.80 டி.எம்.சி. ஆக உள்ளது.