செய்திகள்

மேட்டூர் அணை நீரின் அளவு 58 அடியாக சரிவு

மேட்டூர், ஆக. 5–

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு முற்றிலும் குறைந்து போனதால் 58 அடியாக சரிந்துள்ளது.

மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணைக்கு வரும் நீரின் அளவைக் காட்டிலும், காவிரி டெல்டா பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் 58 அடியாக சரிந்துள்ளது.

2 நாளில் அதிகரிக்க வாய்ப்பு

இதனிடையே ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று காலை 11 மணிக்கு விநாடிக்கு 6 ஆயிரம் கனஅடி நீர்வரத்து இருந்தது. கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு கடந்த 3 நாட்களாக சற்றே அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஒகேனக்கல்லில் நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

காவிரி ஆற்றில் அதிக அளவு தண்ணீர் திறக்கப்படும் பட்சத்தில் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனிடையே காவிரி ஆற்றில் தமிழ்நாட்டிற்கு தேவையான தண்ணீரை கர்நாடகா மாநிலம் திறந்து விட உத்தரவிடக்கோரி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *