செய்திகள்

மொத்தம் 48.46 லட்சம் பேருக்கு இந்தியாவில் கொரோனா’ பாதிப்பு: மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

டெல்லி, செப். 14-

இந்தியாவில் மொத்தம் 48.46 லட்சம் பேருக்கு கொரோனா’ பாதிப்பு ஏற்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று காலை 08.00 மணி நிலவரப்படி, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 47,54,357- லிருந்து 48,46,428 ஆக உயர்ந்துள்ளது.

இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 78,756- லிருந்து 79,722 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் இந்தியாவில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 37.02- லட்சத்திலிருந்து 37.80 லட்சமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் ஒரே நாளில் 77,512 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா பாதித்த 9.86 லட்சம் பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்தியாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 92,071 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ள நிலையில், ஒரே நாளில் கொரோனாவுக்கு 1,136 பேர் உயிரிழந்தனர். இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு விகிதம் 1.64% ஆகவும், குணமடைந்தோர் விகிதம் 78.00% ஆகவும் இருக்கிறது. இந்த தகவலை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *